நானென்பது யாரென்று
புரியவில்லை
வெறும் புத்தகங்களா
நண்பர்களின் சாயைகளா
அனுபவங்கள் என்று நம்பப்படுகின்ற
புனைவுகளா
காலத்தின் படர்ந்து திரியும்
மூதாதைகளா
எனது உடல் எதனால்
நிரப்பட்டிருக்கிறது.
-- லஷ்மி மணிவண்ணன்
ஒரு தரம் காதல்
என்னை மீட்டு தந்தது
ஒரு தரம் புல்லாங்குழல்
என்னை மீட்டுத்தந்தது
ஒரு வண்ணாத்துப்பூச்சியும்
என்னை மீட்டுத்தந்தது
நான் தான் அடிக்கடி
தொலைந்து விடுகிறேன்
-- பூமா ஈஸ்வரமூர்த்தி
காதலிப்பதை போல்
பாசாங்கு செய்யாதே!
காதல் நம்
ஆணைக்கு படியாது!
-- ஆலன் வாட்ஸ்
10 comments:
///கடைசி மடல் என்று
கனவிலும் நினையாதே
மீள
வித்தாய் விழுதலும்
வீரியமாய் முளைத்தலும்
பூவும் பிஞ்சும் கனியும் தாங்கிப்
போராட வருதலும்
எவ்வாறு கடைசியாகும்?
சிறந்த பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளன..
நன்றி காருண்யா!
பின்னூட்டங்கள் தான் பதிவுகளை வாழவைக்கும்!
நல்ல கவிதைகள்..
நன்றி சஞ்சீவன்!
ஆழமான யதார்த்தம்.
அற்புதமான கவிதைகள்.
நல்ல உங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள்
நன்றி jeyamee!
really nice
Thnx!
//புத்த தேசத்திற்கு
ஆயுதம் கொடுத்தது
காந்தி தேசம்//
nice da....
Post a Comment