Sunday, October 25, 2009

பதிய வந்த கதை......


இந்த பூவில் எனக்கு கொள்ளை பிரியம் ஏனோ தெரியாது! நிறமும் வாசமும் அதற்கே உரிய தனித்துவம்! எங்கள் வீட்டு சாமிப்படங்களை கூடுதலாக அலங்கரித்த பூவிது. செம்பருத்தி, தூய தமிழ்ப் பெயர், பெயரிலே ஒருவித கிறக்கம் (மகளுக்கு இடலாம் என்றிருக்கிறேன்!). கடும் பச்சை நிற இலைகளினூடே மெல்லிய காம்புடன் சிவப்பாய் மலர்ந்திருக்கும். சில சமயம் மரம் முழுதுமே பூக்களாய்தான் இருக்கும், சிலசமயம் எதுவுமே இருக்காது! அந்தக்காலம் இதன் இலையை தலைக்கு வைத்துத்தான் 'சனி நீராடுவோம்'. நல்ல குளிர்ச்சி, அனுபவித்தவர்களுக்கே அதன் அருமை தெரியும்! நெஞ்சிலே இறுக்கமாக ஒட்டிய பூவின் பெயரில் ஒரு முயற்ச்சி, அவ்வளவே!

10 comments:

sanjeevan said...

வலைப்பதிவுக்கு வரவேற்கிறோம்
வாழ்த்துக்கள்
உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் அபி...
பதிவு சூப்பர்...

Unknown said...

நன்றி சஞ்சீவன்!!
பதிவில் நீங்கள் மூத்தவர். உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு தேவை!!!!!

பால்குடி said...

மாறன் உம்மையும் பதிவுலகத்துக்கு வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி. தொடர்ந்தும் நிறைய எழுத்துங்கோ. உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறேன்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நன்றி பால்குடி அண்ணே!

Unknown said...

இது எந்த மாறன்??????? பால்குடி கொமெண்ட் போட்டபடியால் இது அந்த மாறனா????

Word Verification வேண்டாமே நீக்கிவிடுங்கள்

Unknown said...

நன்றி கிருத்திகன்!
அப்ப வேற 'மாறனும்' இருக்கோ?

செல்லி said...

பதிவுல வருகைக்கு வாழ்த்துக்கள்!
நம்ம இடத்திலேயும் இந்தப் பூ எப்பவும் பூக்கும்.எனக்கு இந்தப்பூவில சம்பல்போடப் பிடிக்கும்.
கீழேயுள்ள தொடுப்பை கிளிக்குங்க சம்பல் எப்படிச் செய்யிறது எண்டு தெரியும்.
http://selviyin-kusini.blogspot.com/2007_01_01_archive.html

Unknown said...

எங்களுக்கும் செய்திட்டு அனுப்புங்கோவன் செல்லி!

நன்றி உங்கட தகவலுக்கு..!

kethees said...

அபி...
வாழ்த்துக்கள்