எனக்கு சுஜாதா அறிமுகமானது 9ம் ஆண்டில் என்று நினைக்கிறேன், அதற்கு முன்பு ராஜேஸ்குமார், சுபா(சு+பா). இவர்களின் சதக் சதக் கொலைகள், அதற்கு முதல் வாண்டுமாமாவின் சி.ஐ.டி சிங்காரம். நண்பன் மூலம் அறிமுகமானவைதான் சுஜாதா புத்தகங்கள். அன்றிலிருந்து இதுவரைக்கும் எனது மிகச் சிறந்த எழுத்தாளர். இவரிடமிருந்து நான் 'கற்றதும் பெற்றதும்' எராளம்! தமிழகமே கொண்டாடிய - ஆனால் 'இலக்கியவாதிகளால்' புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர். எம் ஊர் வாசிகசாலையில் இவருடைய புத்தகங்கள் எராளம் உண்டு. A/L எடுத்த பின்னர் இவருடைய புத்தகங்களுடன் நாள் முழுக்க இருந்த காலமும் உண்டு. தமிழில் இப்படியொரு எழுத்தாளர் இருக்கிறாரா என்று வியந்தது இருக்கிறேன். எப்போதுமே தொழிலுக்காக இவர் எழுதியது கிடையாது. சம்பிரதாய எழுத்தாளர்களிடம் இருந்து மிக வேறுபட்டவர். எழுத்து நடையே தனிப்பாணி! எந்தவொரு இடத்திலும் சலிக்காமல் கதையை நகர்த்திச்செல்லும் திறமை அவருக்கே தனி! 2008ம் ஆண்டு நான் 2ம் வருடம் படித்துக்கொண்டிருந்த போது, சக்தி FM இல் மரணச்செய்தியை விசேட செய்தியாக ஒலிபரப்பினார்கள். சிலகாலமாகவே சிறுநீரக கோளாரால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார், சென்னை அப்பலோ மருத்துவமனையில் 22/2/2008 ல் இரவு 9.22 க்கு உயிர்பிரிந்தது! எனக்கெல்லாம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் வந்தது இவர் புத்தகங்களால் தான். ஓய்வுபெறும் முதல் Barath Electronics பொறியியலாளராக வேலை பார்த்தார். இவருடைய உழைப்புக்கு கிடைத்த சாட்சி Electronic Voting Machine (EVM) என்று இன்றுள்ள வாக்கெடுப்பு இயந்திரத்தை தயாரித்த BELலின் R & D பிரிவின் சீப் ஆக பணியாற்றினார். இந்த வாக்கெடுப்பு மிஷின் தான் இந்தியாவெங்கும் பயன்படுத்தப் படுகிறது.
திருச்சிராப்பள்ளி சென்யோசப் கல்லூரியில் அப்துல் கலாமுடன் BSc (Physics) 1952 - 1954 காலப்பகுதியில் கற்றார், பின்னர் ஒரு காலத்தில் இருவரும் இணைந்து ரொக்கட் தொழில்நுட்பத்தை பற்றி தமிழில் எழுத இருந்தும் இறுதியில் நிறைவேறவில்லை!
சுஜாதா ஒரு பேட்டியில் "என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை
அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன்,
கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத்
தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக்
கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள்.
மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!"
“முதல் கதை வெளிவந்த போது திருச்சி நகரமே அளம்பி விட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் ‘சிவாஜி '
இதழின் காப்பிகள் கடகடவென்று விற்றுத் தீர்ந்து விட்டன, எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்”, தனது முதல் இதழை பற்றி சுஜாதா..
”
தமிழ் இலக்கியத்தின் மீது நான் கொண்ட ரசனையை பன்மடங்கு உயர்த்தியதற்காகவே அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன்" - கமல்.
"
உன் விஞ்ஞானப் பார்வையால் வெளிச்சம் பெற்றன சில மூளைகள்" - கவிஞை தாமரை
நான் வாசித்த இவருடைய சில புத்தகங்கள்:
24 ரூபாய் தீவு
அடுத்த நூற்றாண்டு
அப்பா அன்புள்ள அப்பா
அப்ஸரா
அனிதா இளம் மனைவி
அனிதாவின் காதல்கள் **
அனுமதி
ஆ **
ஆதலினால் காதல் செய்வீர்
ஆரியப்பட்டா
இதன் பெயரும் கொலை
இருள் வரும் நேரம்
இளமையில் கொல்
இன்னும் ஒரு பெண்
ஊஞ்சல்
என் இனிய இயந்திரா ** (எந்திரன்?)
எப்போதும் பெண் (கருவில் இருந்து கருத்தரிக்கும் வரை ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்)
ஐந்தாவது அத்தியாயம்
ஒரு நடுப்பகல் மரணம்
ஒரு பிரயாணம் ஒரு கொலை
ஓரிரு எண்ணங்கள்
கடவுள் வந்திருந்தார்
கணையாழியின் கடைசிப் பக்கம் (தொகுக்கப்பட்டு புத்தகமாக கீழே)
கணையாழி கடைசிப் பக்கங்கள் **
கம்ப்யூட்டர் கிராமம்
கருப்புக் குதிரை
கரையெல்லாம் செண்பகப்பூ (பின்னர் சினிமாவாக்கப்பட்டது)
கற்பனைக்கும் அப்பால்
கனவுத் தொழிற்சாலை
காயத்ரி (பின்னர் சினிமாவாக்கப்பட்டது)
குரு பிரசாத்தின் கடைசி தினம்
கொலை அரங்கம்
சில வித்யாசங்கள்
சிறீரங்கத்து தேவதைகள் **
சிறு சிறு கதைகள் **
சுஜாதாவின் மர்மக் கதைகள்
செப்டம்பர் பலி
சொர்க்கத் தீவு
தங்க முடிச்சு
திசைக் கண்டேன் வான் கண்டேன்
தீண்டும் இன்பம்
தூண்டில் கதைகள்
தோரணத்து மாவிலைகள்
நகரம்
நிதர்சனம்
நிர்வாண நகரம்
நில் கவனி தாக்கு
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
நில்லுங்கள் ராஜாவே
நிலா நிழல்
நிறமற்ற வானவில்
நிஜத்தைத் தேடி
நைலான் கயிறு
பத்து செகண்ட் முத்தம்
பதினாலு நாட்கள்
ப்ரியா (பின்னர் சினிமாவாக்கப்பட்டது)
பிரிவோம் சந்திப்போம் 1,2 (பின்னர் சினிமாவாக்கப்பட்டது - ஆனந்தத் தாண்டவம்) **
பெண் இயந்திரம்
பேசும் பொம்மைகள்
மத்யமர்மறுபடியும் கணேஷ்
ிஸ் தமிழ்த் தாயே நமஸ்காரம்
மீண்டும் ஒரு குற்றம்
மீண்டும் ஜீனோ **
மூன்று குற்றங்கள்
மூன்று நாள் சொர்க்கம்
மூன்று நிமிஷம் கணேஷ்
மேற்கே ஒரு குற்றம்
ரத்தம் ஒரே நிறம்
வசந்த காலக் குற்றங்கள்
வண்ணத்துப் பூச்சி வேட்டை
வஸந்த்
வாய்மையே சில சமயம் வெல்லும்
வானத்தில் ஒரு மௌனத் தாரகை
வானமென்னும் வீதியிலே
விக்ரம் **
விஞ்ஞானச் சிறுகதைகள்
விடிவதற்குள் வா
விபரீதக் கோட்பாடு
வீட்டுக்குள் வரும் உலகம்
வேணியின் காதலன்
வைரங்கள்
ஜன்னல் மலர்
ஜீனோம்
கமிஷனருக்குக் கடிதம்
கற்றதும் பெற்றதும் 1**, 2
சுஜாதா பதில்கள் 1,2
தலைமைச் செயலகம்
கணிப்பொறியின் கதை
கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு
சிலிக்கன் சில்லுப் புரட்சி (தமிழில் ஓர் மைல் கல்)
மெரீனா **
21ம் விளிம்பு
கடவுள்
கடவுள் இருக்கிறாரா
கடவுள்களின் பள்ளத்தாக்கு
ஏன் எதற்கு எப்படி 1,2
**இடப்பட்டவை மென்புத்தகமாக உண்டு. அஞ்சலிடுங்கள் அனுப்பி வைக்கிறேன்: k.abimaran(--at--)gmail.com
கதை, வசனம் எழுதிய சில திரைப்படங்கள்..
கன்னத்தில் முத்தமிட்டால்
விக்ரம்
சிவாஜி
அந்நியன்
ரோஜா
இருவர்
இந்தியன்
உயிரே
நாயகன்
தசாவதாரம்
முதல்வன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாரதி
ஆயுத எழுத்து
மனைவி பிள்ளைகள், பேரனுடன்..
நிஜ சுஜாதா (மனைவி)
திருவல்லிக்கேணி வீடு
சில உதிரி தகவல்கள்...
மின்னஞ்சல்: writersujatha@hotmail.com
தொலைபேசி: 914424993672
நடாத்திய இணைய இதழ்: www.ambalam.com
இணையதளம்: www.writersujatha.com
விலாசம்: 10, ஜஸ்டிஸ் சுந்தரம் ரோடு,
மைலாப்பூர்,
சென்னை